மனித உரிமை கடப்பாடுகளுக்கு கிடைத்துள்ள உத்வேகத்தை தக்கவைத்து பலன் காணுவது

2015 ஒக்டோபரில் இலங்கையின் அரசாங்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமைக் கடப்பாடுகளை இலங்கை மக்களுக்கும் ஐ நா மனித உரிமைக் கவுன்சிலுக்கும் அறிவித்தது. “கடந்த கால நிகழ்வுகளைக் கையாள்வதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கப்போவதாகவும், முழு அளவிலான நீதி நிர்வாகம் சார்ந்த மற்றும் நீதி நிர்வாகம் சாராத நடைமுறைகள் இதில் உள்ளடக்கப்படும் என்றும், உண்மையை வெளிக்கொண்டுவந்து, நீதி கிடைக்கச்செய்து, நிவாரணமும் இழப்பீடும் தந்து, எதிர்காலத்தில் அப்படியான விதி மீறல்கள் நடக்காது என்ற உத்திரவாதம் கிடைக்கச்செய்வது இந்த நடைமுறைகளின் நோக்கமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமை மீறல்களும் துஷ்பிரயோகங்களும் சட்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற தைரியத்தோடு நடந்துவருவதை முடிவுக்கு கொண்டுவர இந்த நான்கு தூண்களும் அவசியம்.

Elegir un idioma para ver el informe

Descargar PDF